மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எம்.பிக்கள் மீது நடவடிக்கை தேவை என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. ஆரம்ப நாள் முதலே பெகாசஸ், வேளாண் சட்டங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சியினரின் இந்த நடவடிக்கைக்கு சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் வேதனை தெரிவித்திருந்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடிப்பது குறித்து எதிர்க்கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக முடிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட மாநிலங்களவை எம்பிக்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை நேற்று சந்தித்து புகார் அளித்தனர்.







