3-வது முறையாக கைவிடப்பட்ட அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்

அக்டோபரில் நடைபெற இருந்த நடப்பு ஆண்டிற்கான அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் கைவிடப்படுவதாக அறிவிப்பு.   அமெரிக்காவில் அக்டோபர் மாதம் அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் பேட்டிகள் நடைபெற இருந்தன. இந்நிலையில், கொரோனா தொற்று ஒரு…

அக்டோபரில் நடைபெற இருந்த நடப்பு ஆண்டிற்கான அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் கைவிடப்படுவதாக அறிவிப்பு.

 

அமெரிக்காவில் அக்டோபர் மாதம் அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் பேட்டிகள் நடைபெற இருந்தன. இந்நிலையில், கொரோனா தொற்று ஒரு சில நாடுகளில் மீண்டும் அதிகரித்து வருவதால், அமெரிக்கா ஓபன் பேட்மிண்டன் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற இருந்த பேட் மிண்டன் பேட்டிகளை கைவிட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

இதனால், கொரோனாவில் சந்தித்த சிக்கல் காரணமாக, நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதால் இந்த ஆண்டும் போட்டிகள் நடத்தப்படாது என அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக, 2020, 2021 என கடந்த இரண்டு ஆண்டுகள் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தாண்டும் அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.