புதுச்சேரியில் மனம் அழுத்தம் காரணமாக அரசு பெண் ஊழியர் தனது 11 வயது மகனுடன் ஒரு வருடமாக பூட்டிய அறையில் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ரெயின்போ நகரில் வசித்து வரும் சசிகலா, கணவரை பிரிந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டாக தனது மகன் மற்றும் வளர்ப்பு நாய்களுடன் பூட்டிய அறையில் வசித்து வந்துள்ளார்.
ஒரு வருடமாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்த நிலையில், பக்கத்து வீட்டு பெண் அளித்த தகவலின்பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், வீட்டில் இருந்த 6 நாய்களை நகராட்சி ஊழியர்கள் அழைத்து சென்றனர்







