விரைவில் ஆச்சரியமான ஓர் அறிவிப்பு – துரை வைகோ புதிய தகவல்

இன்னும் சில தினங்களில் ஆச்சரியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள போர்டீஸ் மருத்துவமனை மற்றும் நரேஸ்மெண்ட்…

இன்னும் சில தினங்களில் ஆச்சரியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள போர்டீஸ் மருத்துவமனை மற்றும் நரேஸ்மெண்ட் ஃபார் நீடி என்கிற தன்னார்வ அமைப்பு இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது. இந்த முகாமை மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம். ரத்த தானம் செய்பவர்கள் சாதி மதம் ஏழை பணக்காரன் ஏற்ற தாழ்வுகள் பார்ப்பது இல்லை.

மக்கள் மத்தியில் சமத்துவ உணர்வை உருவாக்க ரத்த தானம் ஒரு காரணமாக உள்ளது. சாதி மதம் இனம் கடந்த மனிதம் போற்றும் சுதந்திர இந்தியா உருவாக தான் நம்
முன்னோர்கள் போராடி உயிர் தியாகம் செய்தார்கள். அப்படிபல்பட்ட மனிதம் போன்றும் இந்தியாவை உருவாக்க நம் அனைவரும் பாடுபட வேண்டும். மதிமுக சார்ந்து முக்கிய முயற்சியை எடுக்க உள்ளேன். அதை இன்னும் சில நாட்களில்
அனைவருக்கும் தெரிவிக்க உள்ளேன். அது ஒரு ஆச்சரியமான அறிவிப்பாக இருக்கும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.