கொடைக்கானல் மேல் பள்ளம் வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீயை, வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைக்காலம் துவங்கும் முன் காட்டு தீ
ஆங்காங்கே ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே
பெரும் பள்ளம் வன சரகத்திற்கு உட்பட்ட வடகவுஞ்சியை ஒட்டியுள்ள மேல் பள்ளம்
பகுதியில் நள்ளிரவில் காட்டு தீ பற்றி எரியத் துவங்கியது.
இதையடுத்து, தகவல் அறிந்த வனத்துறையினர் வனப்பகுதிக்கு தீ தடுப்பு காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கிராம மக்கள் என 50க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகம் அதிகரிப்பால் தீ கொழுந்து விட்டு எரிந்தது இதனால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். மேலும் வன விலங்குகளைப் பாதுகாக்க எதிர்
தீ வைத்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 5 மணி நேரம் போராடி தீயை
அணைத்தனர். தீ எப்படி பற்றியது என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் புகை பிடித்துவிட்டு வனப்பகுதிக்குள் வீசவேண்டாம் என்றும், தீ மூடுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது வன சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளனர் .







