சபரிமலைக்கு சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தரின் இருமுடி பையில் பாம்பு பதுங்கி இருந்தது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓணம் பண்டிகையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சேர்ந்த பக்தர் ஒருவர் சபரிமலை கோயிலுக்கு வந்த போது, அவரது இருமுடியில் அசைவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, 18 படி அருகே இருமுடியை இறக்கி வைத்துள்ளார். இருமுடியை பிரித்து உள்ளே பார்த்த போது சிறிய பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து அங்கு சென்ற சிறப்பு காவல்படை வீரர் லாவகமாக பாம்பை பிடித்து சென்றார்.







