ரயிலின் ஏசி பெட்டிக்குள் சுற்றித்திரியும் எலிகள் | அதிர்ச்சி வீடியோ!

ரயிலின் ஏசி பெட்டிக்குள் எலி இருப்பதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பெண் ஒருவர் X-தளத்தில் பகிர்ந்துள்ளார். ஜஸ்மிதா பதி என்ற பெண் புவனேஸ்வர் – ஜுனகர் எக்ஸ்பிரஸ் ஏசி பெட்டியில் பயணித்த ரயில் பெட்டியில்…

ரயிலின் ஏசி பெட்டிக்குள் எலி இருப்பதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பெண் ஒருவர் X-தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜஸ்மிதா பதி என்ற பெண் புவனேஸ்வர் – ஜுனகர் எக்ஸ்பிரஸ் ஏசி பெட்டியில் பயணித்த ரயில் பெட்டியில் எலிகள் சுற்றித் திரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  பின்னர் தனது X தள பக்கத்தில் எலி இருப்பதைக் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில்,  ரயில்வே அமைச்சகம்,  மத்திய ரயில்வே மற்றும் இந்திய ரயில்வே ஆகியவற்றை குறியிட்டு “எலிகள் சுற்றித் திரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் மற்றும் இந்த ரயில் பயணத்தில் தூய்மை என்பது மிகவும் மோசமாக இருந்தது.  இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அவசரமாக ஏதாவது செய்ய வேண்டும்.

பின்வரும் இடுகையில், அந்தப் பெண் முதலில் புகாரைப் பதிவு செய்ய முயன்றபோது ரயில்வே உதவி எண் 139 ஐ எனது புகாருக்கு பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். சுகாதாரம் குறித்த கவலைகளை எழுப்பியபோது ரயில்வே ஊழியர்கள் தனது கவலையை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.