கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நரியை விழுங்கிய மலைப்பாம்பின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கேரளா, கோழிக்கோடு தாமரைச்சேரி பகுதியிலுள்ள ஒரு நீரோடையில் மலைப்பாம்பு ஓன்று நரியை கொன்று விழுங்கி கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இது தொடர்பாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தை தொடர்ந்து வனத்துறையினர் வந்து நரியை விழுங்கிய மலைப்பாம்பை கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.
மலைப்பாம்பு நரியை விழுங்கும் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
சே.அறிவுச்செல்வன்







