கிருஷ்ணா நதி நீரை தெலங்கான சட்டவிரோதமாக உபயோகிக்கிறது: மேலாண்மை வாரியத்தில் ஆந்திரா புகார்

சென்னை குடிநீருக்காகவும், ராயலசீமா பாசனத்துக்காகவும் தர வேண்டிய ஸ்ரீசைலம் அணை நீரை தெலங்கானா மாநில அரசு சட்டவிரோதமாக உபயோகித்து விட்டதாக ஆந்திரா அரசு சார்பில் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

சென்னை குடிநீருக்காகவும், ராயலசீமா பாசனத்துக்காகவும் தர வேண்டிய ஸ்ரீசைலம் அணை நீரை தெலங்கானா மாநில அரசு சட்டவிரோதமாக உபயோகித்து விட்டதாக ஆந்திரா அரசு சார்பில் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்துக்கு ஆந்திர அரசு எழுதியுள்ள கடித த்தில் கூறப்பட்டுள்ளதாவது:
“கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் அணையில் இருந்து 43.25 டிஎம்சி தண்ணீர், நாகார்ஜூண சாகர் அணையில் இருந்து 27.23 டிஎம்சி தண்ணீர், புலிசிந்தாலாவில் இருந்து 11.92 டிஎம்சி தண்ணீர் என தெலங்கானா அரசு சட்டவிரோதமாக தண்ணீரை எடுத்து மின் உபயோகத்துக்காக பயன்படுத்தி உள்ளது. இது குறித்து கிருஷ்ணா ஆறு மேலாண்மை வாரியத்துக்கு தெலங்கானா அரசு எந்த ஒரு தகவலும் அளிக்கவில்லை” இவ்வாறு ஆந்திரா அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திரா,தெலங்கானா மாநிலங்கள் 66:34 என்ற விகிதத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தெலங்கானா 82.40 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்தலாம். ஆந்திர மாநிலம் 160 டிஎம்சி தண்ணீரை உபயோகிக்கலாம். ஆந்திர மாநில உபயோகத்துக்கான தண்ணீரில் இருந்து சென்னை குடிநீருக்கு 3 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.