சமந்தாவுடன் செல்ஃபி எடுத்த குரங்கு.. வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமந்தா ஓய்வு எடுக்க தன் தோழி ஒருவருடன் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்குச் சென்றுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர்…

நடிகை சமந்தா ஓய்வு எடுக்க தன் தோழி ஒருவருடன் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்குச் சென்றுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் ’குஷி’ படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஷிவ நிர்வாணா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைக்கும் இந்தப் படம் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், வருண் தவானுடன் சிட்டாடெல் வெப் சீரீஸிலும் நடிகை சமந்தா நடித்து முடித்தார்.

தற்போது மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகின. எனவே புதிதாக ஒப்பந்தமாகவிருந்த படத்திற்கான முன்பணத்தை தயாரிப்பாளர்களிடம் திருப்பியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, சமந்தா அதற்காக ஓய்வு எடுக்க தன் தோழி ஒருவருடன் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இயற்கை சூழ்ந்த பாலி இடங்களையும் குரங்குகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் சமந்தா!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.