மலேசியாவில் இதுவரை அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படத்தின் சாதனையை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனையை ஜெயிலர் படைத்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
இதுவரை ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ₹ 640 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ₹ 650 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தைத் தவிர நாட்டின் பிற மாநிலங்களில் இப்படம் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இப்படம் ரூ.76.85 கோடியும், கர்நாடகத்தில் ரூ.62.9 கோடியையும் கேரளத்தில் ரூ.49.25 கோடி மற்றும் பிற மாநிலங்களில் ரூ.14.6 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.
தமிழ்நாட்டில் மட்டும் ஜெயிலர் படம் ரூ.175 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு காசோலை வழங்கியதுடன் சொகுசுக் கார்களையும் பரிசளித்தார். மேலும், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயத்தையும் பரிசாகக் கொடுத்தார்.
இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், மலேசியாவில் இதுவரை அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமான ‘தில்வாலே’ படத்தின் சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளது.