#UttarPradesh | 6 வயது சிறுமியை மனித மிருகத்திடமிருந்து காப்பாற்றிய குரங்கு கூட்டம்!

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை தாக்கி, அவரிடமிருந்து 6 வயது சிறுமியை குரங்கு கூட்டம் ஒன்று காப்பாற்றியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்…

#UttarPradesh : A herd of monkeys saved a 6-year-old girl from a human beast!

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை தாக்கி, அவரிடமிருந்து 6 வயது சிறுமியை குரங்கு கூட்டம் ஒன்று காப்பாற்றியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அரசு கடுமையான தண்டனைகளை கொண்டு வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த மாற்றமும் இல்லாமல் எல்லா குற்றங்களும் நிகழ்ந்தே வருகின்றன.

இந்நிலையில் ஒரு கொடூர மனித மிருகத்திடமிருந்து, 6 வயது சிறுமியை குரங்குகள் கூட்டம் பாதுகாத்திருப்பது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் 6 வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நபர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக காட்டில் உள்ள பழைய வீட்டிற்கு இழுத்து சென்றுள்ளார்.

பின்னர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அங்கு வந்த குரங்குகள், அந்த நபரை ஆக்ரோஷமாக தாக்கியுள்ளன. இதனால் அந்த நபர் சிறுமியை விட்டு விட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். அங்கிருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு வந்து, பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதை தொடர்ந்து இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த அடையாளம் தெரியாத நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறியதாவது;

“சிசிடிவி காட்சிகளில் அந்த நபர், எனது மகளுடன் ஒரு குறுகிய பாதையில் நடந்து செல்வதைக் காண முடிந்தது. அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எனது மகளை கொன்று விடுவதாக மிரட்டினார். குரங்குகள் இல்லாமல் இருந்திருந்தால் என் மகள் இந்நேரம் இறந்து போயிருப்பாள்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.