தளபதி விஜய் பயிலகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது குறித்து நடிகர் விஜயுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் பயிலகம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பயிலகத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 14 இடங்களில் பயிலகம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றார். இதில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது குறித்து விஜயுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







