அண்ணா நூலகத்திற்கும், கலைஞர் நூலகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன..?

மதுரையில் நாளை கலைஞர் நூலகம் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள அண்ணா நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்  குறித்து விரிவாக பார்ப்போம். மதுரை புதுநத்தம் சாலை டிஆர்ஓ காலனி அருகே ரூ.215 கோடியில் 2 இலட்சத்து 13 ஆயிரத்து…

மதுரையில் நாளை கலைஞர் நூலகம் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள அண்ணா நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்  குறித்து விரிவாக பார்ப்போம்.
மதுரை புதுநத்தம் சாலை டிஆர்ஓ காலனி அருகே ரூ.215 கோடியில் 2 இலட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ.60 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 3.30 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
இதன்  திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரையில் 2000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கும் உள்ள வித்தியாசங்களை பார்ப்போம்.
உலகில் உள்ள பல  நூலகங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் சென்னை  அண்ணா நூலகத்தை போல் எங்கும் பார்த்ததில்லை என அமெரிக்க முன்னாள் அதிபர் பில்  கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.  அண்ணா நூலகம்  திறப்பு விழாவில் பங்கேற்ற மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, அண்ணா புத்தகத்தின்  மீது வைத்திருந்த காதல் தான் அவர் பெயரில் நூலகம் அமைக்க தூண்டியது.  எப்போதும்  புத்தகத்துடன் காணப்படும் அண்ணாவின் மரணத்தின் போதும்  கையில் புத்தகம்  வைத்திருந்ததை கருணாநிதி நினைவுகூர்ந்தார்.
கட்டட பரப்பளவிலும், புத்தகம் எண்ணிக்கையிலும் அண்ணா நூலகம் பெரியது. ஆனால் கலைஞர்  நூலகம்  நவீன காலத்திற்கு ஏற்றவகையில் நவீன வசதிகளுடன்  அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள  நிலையில், கலைஞர் நூலகம் 3.56 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகத்தின்  கட்டிட அளவு 3,75 லட்சம் சதுர அடி. கலைஞர் நூலகத்தின் கட்டட அளவு 2,13 லட்சம் சதுர  அடி. அண்ணா நூலகம்  8 தளங்களை கொண்டது. கலைஞர் நூலகம் 6 தளங்களில்  உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அண்ணா நூலகத்தை திறந்து வைத்தார். மதுரை கலைஞர் நூலகத்தை முதலமைச்சர்  ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். கலைஞர் நூலகம் 208.91 கோடி திட்ட மதிப்பில்  உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகம் 180 கோடி திட்ட மதிப்பில்  அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.