99.9% ஒளியை உள்வாங்கும் 16 ஆழ்கடல் கருப்பு மீன் இனங்கள் கண்டுபிடிப்பு!

99.9% ஒளியை உள்வாங்கும் திறனை கொண்ட 16 கருப்பு மீன் இனங்களை அமெரிக்காவின் உயிரியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  விண்வெளியைபோலவே கடலில் பல்வேறு மர்மங்கள் நிரைந்துள்ளன. கடல் ஆழத்தில் வாழும் உயிரினங்கள் மற்றும் அதன் தன்மை தொடர்பாக…

99.9% ஒளியை உள்வாங்கும் திறனை கொண்ட 16 கருப்பு மீன் இனங்களை அமெரிக்காவின் உயிரியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

விண்வெளியைபோலவே கடலில் பல்வேறு மர்மங்கள் நிரைந்துள்ளன. கடல் ஆழத்தில் வாழும் உயிரினங்கள் மற்றும் அதன் தன்மை தொடர்பாக ஆராய சர்வதேச நாடுகளின் உயிரியல் ஆர்வலர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கலிபோர்னியாவின் மான்டேரி விரிகுடா கடலில்  200 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உயிரியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 99.9% ஒளியை உள்வாங்கும் திறனை கொண்ட 16 கருப்பு மீன் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

றனை கொண்

இந்த மீன்கள் அனைத்தும் சூரிய ஒளி படாத அதிக ஆழம் உள்ள கடல்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. மீன்கள் அதிக கருமையாகவும் மற்ற மீன்களுக்கு புலப்படாமல் மறையும் தன்மையும் கொண்டவையாக உள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், நுண்ணோக்கின் கீழ் மீன் தோலின் மாதிரிகளை ஆராய்ந்த பின்னர், மீன் தோலில் மெலனோசோம்கள் எனப்படும் உறுப்புகளின் ஒரு அடுக்கு இருப்பதை கண்டுபிடித்தோம், இதில் மெலனின் உள்ளது, அதே நிறமி மனித சருமத்திற்கும் கூந்தலுக்கும் வண்ணம் தருகிறது.

தலுக்கும் வ

மெலனோசோம்களின் இந்த அடுக்கு மீன்கள் மீது படும் பெரும்பாலான ஒளியை உறிஞ்சுகிறது. இந்த மீன் இனங்கள் பெரும்பாகும் கருப்பாக இருந்தாலும் ஆபத்துகாலங்களில் மறைந்துவிடும் திறன் வாய்ந்தவை. மேலும் அந்த மீன்கள் உள்வாங்கும் ஒளியை இறையக் கவர்வதற்காக உபயோகப்படுத்துகிறது எனவும் தெரிவித்தனர்.

யை இறையக்

விசித்திரமான மற்றும் திகிலூட்டும் ஆழ்கடல் இனங்கள், க்ரெஸ்டட் பிக்ஸ்கேல், ஃபாங்க்டூத் மற்றும் பசிபிக் பிளாக் டிராகன் போன்றவை எனவும் கலிஃபோர்னியா கடற்கடையில் இன்னும் இதுபோன்ற அதிக கருப்பு உள்ள மீன் இனங்கள் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply