முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டிற்கு 90,000 மெ.டன் யூரியா ஒதுக்கீடு

யூரியா தேவை குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது 90,000 மெ.டன் யூரியா தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் தனது அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி எழுதிய கடிதத்தினை தொடர்ந்து மத்திய அரசு 90,000 மெ.டன் யூரியா தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் சாதகமான பருவமழை காரணமாக 13.747 இலட்சம் எக்டரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள் வரை 7.816 இலட்சம் எக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா ( இராபி) பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.829 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக யூரியா மற்றும் டிஏபி உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

மத்திய அரசு, அக்டோபர் மாதத்திற்கு யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் முறையே 1,43,500 மெ.டன், 4,480 மெ.டன் மற்றும் 8,140 மெ. டன் ஒதுக்கீடு செய்தது. யூரியா 1,43,500 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள் வரை உர உற்பத்தி நிறுவனங்களால் 77,863 மெ.டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின்படி 63,000 மெ. டன் இறக்குமதி யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது.

டிஏபி 45,150 மெ. டன் உரத்தேவைக்கு 4,480 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள் வரை 11,781 மெ.டன் டிஏபி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பொட்டாஷ் உரத்தின் அக்டோபர் மாத உரத்தேவை 31,700 மெ. டன்னிற்கு பொட்டாஷ் 8,140 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுநாள்வரை 14,456 மெ. டன் பொட்டாஷ் உரம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் விவசாயபணிகளுக்கு தட்டுப்பாடின்றி மானிய உரங்கள் கிடைக்க வழி செய்திடவும்,தமிழ்நாட்டில் உரத்தேவை அதிகரித்து வருவதைகருத்தில்கொண்டு விவசாய பெருங்குடி மக்களின் நலனை பாதுகாத்திடும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசின் இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சருக்கு 21.10.2021 அன்று யூரியாவினை உரித்த காலத்தே வழங்கிடவும், 20,000 மெ. டன் டிஏபி மற்றும் 10,000 மெ. டன் பொட்டாஷ் உரத்தினை கூடுதலாக ஒதுக்கீடு செய்து குறைவின்றி வழங்குமாறு கடிதம் எழுதினார்.

முதலமைச்சரின் கடிதம் காரணமாக காரைக்கால் துறைமுகத்திற்கு வரவுள்ள 90,000மெ.டன் இறக்குமதி யூரியாவினை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உள்ளூர் உர தயாரிப்பு நிறுவனங்களான ஸ்பிக் நிறுவனம் இதுநாள் வரை 25,212 மெ.டன் யூரியாவினை வழங்கியுள்ளது. எம்எப்எல் உர நிறுவனம் இது நாள் வரை 26,185 மெ.டன் யூரியாவினை வழங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் ஸ்பிக் நிறுவனம் 10,000 மெ. டன் மற்றும் எம்எப்எல் உர நிறுவனம் 8,000 மெ. டன் யூரியாவினை வழங்கிட திட்டமிட்டுள்ளன.

காரைக்கால் துறைமுகத்தில் தற்சமயம் இருப்பில் உள்ள 4,000 மெ.டன் உரம் யூரியா இரயில் மார்க்கமாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநரால் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு உரத்தேவை தொடர்பான விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு மாவட்ட அளவில் உடனடி நடவடிக்கைகள் வேளாண்மைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’

Arivazhagan Chinnasamy

பொன்னியின் செல்வன் டீசர் – புதிய அப்டேட்

Vel Prasanth

பல ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கேட்டு போராடும் இருளர் சமுதாய மக்கள்

Jeba Arul Robinson