மத்தியில் 9 ஆண்டுகால ஆட்சி சாதனையா…? சறுக்கலா…?

மத்தியில் மோடி தலைமையிலான  பாஜக அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 9 ஆண்டு கால ஆட்சி சாதனையா சறுக்கலா என்பது குறித்து விரிவாக காணலாம். பா.ஜ.க.வைச் சேர்ந்த நரேந்திர மோடி,…

மத்தியில் மோடி தலைமையிலான  பாஜக அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 9 ஆண்டு கால ஆட்சி சாதனையா சறுக்கலா என்பது குறித்து விரிவாக காணலாம்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த நரேந்திர மோடி, கடந்த 2014ல், நாட்டின் பிரதமராக முதன் முறையாக பதவியேற்றார். 5 ஆண்டுகளை நிறைவு செய்த அவர், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றியை பெற்றார். தற்போது மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்து, 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதன்மூலம் காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவர், நீண்ட நாட்களாக இந்திய நாட்டின் பிரதமராக இருக்கிறார் என்ற பெருமையை நரேந்திர மோடிக்கு பெற்று தந்துள்ளது. இதை அக்கட்சியினர் நாடு முழுதும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தனது முதல் ஆட்சிக் காலத்தில், மேக் இன் இந்தியா மற்றும் வறுமையை நீக்க ஜன்தன் யோஜனா போன்ற பல திட்டங்களை மோடி அரசு அறிமுகம் செய்தார்.

மேலும் அனைத்து வீடுகளிலும் கழிவறை, சுவட்ச் பாரத், ஆயுஷ்மான் பாரத் போன்ற சில முக்கிய திட்டங்கள் மோடி அரசியின் 9 ஆண்டுகால சாதனைகளாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேபோல வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மோடி அரசைப் போல வேறு எந்த அரசும் அதிகம் கவனம் செலுத்தவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இப்படி, கடந்த  9 ஆண்டுகளில் அவர் பல சாதனைகள் படைத்திருந்தாலும் சில சறுக்கல்களையும் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராமர் கோயில் கட்டுவது, குடியுரிமை சட்டத் திருத்தம், முத்தலாக்  தடை சட்டம் , காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து  உள்ளிட்ட கருத்தியல் சார்ந்த விவகாரங்களுக்கு பலதரப்பிலிருந்து எழுந்த  எதிர்ப்புக்கு மத்தியிலும்  பாஜக அரசு, தான் எடுத்த முடிவுகளை செயல்படுத்தி இருக்கிறது.

அதேபோல கடந்த 2016ம் ஆண்டில் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எவ்வளவு கருப்பு பணம் ஒழிக்கப்பட்டது என்பதற்கான எந்த விடையும் இதுவரை இல்லை என்பது, மோடி அரசங்காம் மீது  முனவைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டாகும்.

அதுமட்டுமல்லாமல் 2014-ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.  மேலும் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வேலை இழப்பு அதிகமா உள்ளதாக விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இன்னொருபுறம் மோடியின் ஆட்சிக் காலத்தில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் ஒரு  போராட்டம் அரசு எடுத்த முடிவையே  திரும்ப பெற செய்தது.  விவசாயத் துறை தொடர்பான மோடி அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அரசுக்கும் போராட்ட குழுவுக்கும் இடையே 15 முறை பேச்சுவார்த்தைகள் நடந்தும், விவசாயிகளின் மனஉறுதியால், இறுதியாக விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார் .

1950ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட பொருளாதார ரீதியான முடிவுகளை எடுக்கும் திட்டக் குழுவை, கலைத்து 2015ஆம் ஆண்டு மோடி அரசு நிதி ஆயோக் அமைப்பை கொண்டு வந்தது மிக தவறான முடிவாக விமர்ச்சிக்கப்பட்டது. அதேபோல மோடியின் விருப்பமான திட்டமாக கருதப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடம் (சென்ட்ரல் விஸ்டா ) திறப்பு விழாவில் செங்கோல் வைக்கப்பட்டதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம் என தொடர்ந்து முழங்கிவரும் பிரதமர் மோடி, மல்யூத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு மௌனம் காப்பதாக அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இப்படி மோடி அரசாங்கம் மீது பல பாராட்டுகளும், விமர்சனங்களும் மாறி மாறி முன்வைக்கபடுகின்றன. இந்த நிலையில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்லிலும், ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார் என்று பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.

அப்படி நடந்தால் தொடர்ந்து 3 முறை பிரதமர் என்ற வரலாற்று சாதனையை நரேந்திர மோடி பொறுவார். காலம் கணியுமா? மோடியின்  மேஜிக் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.