டெல்லி உயிரியல் பூங்காவில் நிமோனியாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 9 மாத வெள்ளை புலி உயிரிழந்ததாக பூங்கா இயக்குநர் சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.
1952 ஆம் ஆண்டு தேசிய விலங்கியல் பூங்கா டெல்லியில் நிறுவப்பட்டது. இந்த பூங்கா டெல்லி உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட 176 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் கடுமையான நிமோனியா காரணமாக 9vமாத பெண் வெள்ளைப் புலி ஒன்று சிகிச்சை பெற்று வந்தது. செப்டம்பரில் இருந்து அந்த குட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தது. இந்த நிலையில் அந்த புலி 5 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா இயக்குநர் சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அதன் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மற்ற குட்டிகளுக்கு தடுப்பு சிகிச்சை மற்றும் நெருக்கமான கண்காணிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறினார்.






