79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி – சாம்பியன் பட்டம் வென்றார் தமிழ்நாடு வீரர் வேலவன்..!

79 வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டை சார்ந்த வேலவனும், மகளிர் பிரிவில் அனகாட் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்கள். சென்னையில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி…

79 வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டை சார்ந்த வேலவனும், மகளிர் பிரிவில் அனகாட் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்கள்.

சென்னையில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் 79 வது தேசிய
ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகள் நவம்பர் 23 ஆம் தேதி சேத்துப்பட்டில் உள்ள, ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்றது. மேலும், இறுதிப் போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 13 வயது முதல் 75 வயது வரை போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

குறிப்பாக, தொழில் முறை ஸ்குவாஷ் வீரர்களுக்கான தேசிய சாம்பியன்ஷிப்
போட்டியில், ஆடவர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வேலவன் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

இறுதிப்போட்டியில் ஆசிய கோப்பை தொடரில் பதக்கம் வென்ற, சக தமிழ்நாடு வீரர் அபய் சிங்கை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் வேலவன். இது அவரது முதல் தேசிய சாம்பியன் பட்டம் ஆகும்.

அதனை தொடர்ந்து,  மகளிர் பிரிவில், டெல்லி வீராங்கனை அனகாட் சிங் சாம்பியன்
பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில், இந்தியாவின் முன்னனி வீராங்கனை தன்வி
கண்ணாவை எதிர்கொண்ட போது,  தன்வி காயம் காரணமாக விலகியதை அடுத்து அனகாட் சாம்பியன் பட்டம் வென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.