திமுக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஆர்.எஸ்.பாரதி வீடு உள்ளது. அண்மையில் கோவில்பட்டியில் நடந்த திமுக பொது கூட்டத்தில் ஆட்சியை கலைத்தால் பா.ஜ.க.வினர் நடமாட முடியாது என ஆர்.எஸ். பாரதி பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜ.க. இளைஞரணி செயற்குழு உறுப்பினர் வினோத் குமார் தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்.எஸ். பாரதி வீட்டை முற்றுகையிட சென்றனர். ஏற்கெனவே அங்கு வந்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்து கைது செய்தனர்.
—கா.ரு்பி.







