சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை கடந்த 6வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
இந்தியா – ஆஸ்திரலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் எடுத்தது. இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. கில், கோலி சிறப்பாக ஆடி சில சாதனைகளை படைத்துள்ளதை போல, கேப்டன் ரோஹித் சர்மாவும் இந்தத் தொடரில் தடம் பதித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: கில், கோலி சிறப்பான ஆட்டம் – வலுவான நிலையில் இந்தியா
முதல் இன்னிங்ஸில் அவர் 35 ரன்கள் எடுத்தார். கில்லுடன் இணைந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்து, தனது ட்ரேட் மார்க் ஷார்ட்களை ஆடி கவனம் ஈர்த்தார் ரோஹித். தொடரின் தொடக்கத்தில் இருந்தே சதம் அடித்து ஆஸி வீரர்களாலும் பாராட்டப்பட்டவர் ரோஹித். இந்தப் போட்டியின் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை எடுத்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, கோலி ஆகியோருடன் ரோஹித் இணைந்துள்ளார்.
ரோஹித் 2007ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். மூன்று தரப்பு கிரிக்கெட்டிலும் சேர்த்து இதுவரை 438 போட்டிகளில் அவர் ஆடியுள்ளார். இன்னும் 165 ரன்கள் எடுத்தால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கோலியை முந்துவதற்கும் வாய்ப்புள்ளது.
-ம.பவித்ரா