உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் மானசா தேவி கோவில் அமைந்துள்ளது. இன்று கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இருந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக தகவல் பரவியதே இந்த நெரிசலுக்கு காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஓட முயற்சித்ததால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.







