முக்கியச் செய்திகள் தமிழகம்

52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: ஹர்ஷவர்த்தன்

நாடு முழுவதும் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் கடந்த மாதம் 3-ம் தேதி அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் 16-ம் தேதி முதல், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 21 நாட்களில், இதுவரை, 52 லட்சத்து 90 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தின்போது பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், அடுத்த மாதம் முதல் 50 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி!

Vandhana

மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது: சீமான்!

Ezhilarasan

ஜொமோட்டா ஊழியரை தாக்கிய பெண் மீது வழக்கு பதிவு

Jeba Arul Robinson

Leave a Reply