5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள்-ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சாதனை

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 52 லட்சம் பனை விதைகளை 5 மணி நேரத்தில் விதைத்து மாவட்ட நிர்வாகம் உலக சாதனை படைத்தது. ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நீர் வளத்தை பெருக்கவும் கிராமப்புறங்களில் உள்ள மக்களின்…

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 52 லட்சம் பனை விதைகளை 5 மணி நேரத்தில்
விதைத்து மாவட்ட நிர்வாகம் உலக சாதனை படைத்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நீர் வளத்தை பெருக்கவும் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பண விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் அரசு துறையினர், மற்றும் தனியார் தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் என 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தனர்.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 50 லட்சம் பனை விதைகள் விதைக்க திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் 5 மணி நேரத்தில் 52,81,647 பனை விதைகள்
விதைக்கப்பட்டது. இது உலக சாதனையாக கருதப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாதனையை அங்கீகரித்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட், ஏசியன் ரெகார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெகார்ட் அகாடமி , தமிழ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதனை சாதனையாக பதிவு செய்து அங்கீகரித்தன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக ஆர். காந்தி உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு வழங்கினார்.   

தொடர்ந்து நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, “ராணிப்பேட்டை மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து
செயல்பட்டு வருகிறது” என பாராட்டு தெரிவித்தார் . மேலும் மாவட்டம் முழுவதும்
இன்று 52,81,647 பனை விதைகளை விதைத்து சாதனை புரிந்து இருப்பதை வரவேற்றார்.
அனைவரும் தாங்கள் சார்ந்து இருக்கின்ற கட்சியை பற்றி தேர்தல் நேரத்தில்
மட்டுமே நினைக்க வேண்டும் என்றும் அதன் பிறகு ஒற்றுமையாக இருந்து மக்களுக்கு
சேவை செய்வதோடு பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என
தெரிவித்தார் ஆர்.காந்தி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.