ஒரு டாட் பந்துக்கு 500 மரங்கள் வீதம் 294 டாட் பந்துகளுக்கு 147000 மரங்கள் நட வேண்டும் என பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளேஆப் போட்டியில் டாட் பந்துகளுக்கு மரக்கன்றுகள் நடப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி நேற்று தனது 5 ஆவது வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதல் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்ட இருஅணிகளாக சென்னை மற்றும் குஜராத் அணிகள் சிறந்து விளங்கின. இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலபரீட்சை நடந்த நிலையில் சென்னை அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
பிளேஆப் சுற்று முதல் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆட்டத்தின் போது ஒவ்வொரு டாட் பந்துகளின் போதும் டாட் பந்துகளை குறிக்கும் குறியீடுகளுக்கு பதிலாக மரம் வடிவிலான குறியீடு இடம் திரையில் இடம்பெற்றது.
இந்த நிலையில் நான்கு போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 332 டாட் பந்துகள் கணக்கிடப்பட்டன. குவாலிபயர் 1 போட்டியில் மட்டும் 84 டாட் பந்துகள் கணக்கிடப்பட்டுள்ளன. நேற்றைய போட்டியில் 45 டாட் பந்துகள் வீசப்பட்டுள்ளன. இதன் அடிப்படையீல் மொத்தமாக 294 டாட் பந்துகளுக்கு 147000 மரங்கள் நட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







