விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில், எட்டையாபுரம் சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 500 மரங்க்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, மரங்கள் மக்கள் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த மரங்கள் மக்கள் இயக்கம் மூலம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒருகோடி மரம் நடுவது என தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் விளாத்திகுளம்-எட்டையாபுரம் சாலையில் உள்ள சொக்கலிங்கபுரம் முதல் கழுகாசலபுரம் வரையிலான, 6 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையின் இருபுறமும் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ஆறுமுக நயினார் தலைமையும், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முன்னிலையும் வகித்தனர். இவ்விழாவில், தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான ஜெயராமன் கலந்துகொண்டு, மரம் நட்டுவைத்து விழாவைத் துவங்கிவைத்தார். விழாவில்,விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், பி.டி.ஓக்கள்,தங்கவேல், முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
— சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: