வேலை நிறுத்தத்தால் 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு – தொமுச பொருளாளர் நடராசன்

இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தால் இதுவரை 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொமுச பொருளாளர் நடராசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்…

இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தால் இதுவரை 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொமுச பொருளாளர் நடராசன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், தொமுச, சி.ஐ.டி.யு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கத்தினர் சென்னை பாரிமுனையில் உள்ள குறளகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தொமுச பொருளாளர் நடராசன், தொழிலாளர் நலத் திட்டங்களை கண்மூடித்தனமாக மத்திய அரசு மாற்றுகிறது என குற்றம்சாட்டினார்.

அண்மைச் செய்தி: “ஆப்ரேஷன் கஞ்சா 2.0 – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு”

12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோவை ஸ்டேட் பேங்க் சாலையில் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொமுச, சி.ஐ.டி.யு., ஹெச்.எம்.எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும், பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேபோல், திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 4 ஜி சேவையை தொடங்க மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.