தென்காசியில் மின்சாரம் பாய்ந்து 5 வயது குழந்தை உயிரிழப்பு!

தென்காசியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தை மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மலை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடங்கநேரி கிராமத்தில் மின்கம்பம் அருகே இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு சிறுவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 5 வயது குழந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளது.

மேலும், மற்றொரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் இரும்பு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

அப்போது செமித்ரா என்ற ஐந்து வயது குழந்தை மின்சார கம்பியில் கை  வைத்ததால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ப்ரீத்திஷா என்ற 9 வயது குழந்தை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.