சென்னை எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே 4-வது பாதை திட்டம் | பணிகளை முடிப்பதில் தாமதம்…

கடற்கரை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 4-ஆவது வழித்தடம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் ரயில்பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே, எழும்பூர்-கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க…

கடற்கரை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 4-ஆவது வழித்தடம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கூடுதல் ரயில்பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே, எழும்பூர்-கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரூ.280 கோடி மதிப்பில் 4வது புதிய பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, நடப்பு பட்ஜெட்டில்ரூ. 96. 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வதுபாதைக்கான பணி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது. முதல்கட்டமாக, கோட்டை, பூங்காநகர் ஆகிய ரயில் நிலையங்களில் செடிகள், பழைய தண்டவாளங்கள் என் தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து, ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றது. இப்போது, இந்த பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில்,  கோட்டை ரயில் நிலையம் அருகே ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த ரிசர்வ் வங்கி ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதனால், அந்த நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடற்கரை எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 4-ஆவது வழித்தடம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.