சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.46 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.46 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் இருந்து பினாய் அதிவிரைவு ரயில் வந்தது. அப்போது,…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.46 லட்சம் ஹவாலா பணத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் இருந்து
பினாய் அதிவிரைவு ரயில் வந்தது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆணையர் ராஜு தலைமையில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ரோகித் குமார், பத்மாகர் உட்பட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் சந்தேகப்படும் வகையில் இருந்ததால் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் அவர் கொண்டுவந்த கட்ட
பையில் உள்ள உடமைகளை சோதனை  செய்தபோது அவரிடம் 46 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது.

அதேபோல் ரவி கொண்டுவந்த பணத்திற்கு எந்தவித உரிய ஆவணங்களும் இல்லாமல் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. மேலும் பிடிபட்ட ரவியிடம் இந்த பணம் யாரிடம்
இருந்து கொண்டுவரப்பட்டது என்றும் சென்னையில் யாரிடம் கொண்டு சேர்க்கப்பட
உள்ளது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 46 லட்சம் ரூபாயை வருமான வரித்துறை டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகளிடம் ரயில்வே போலீசார் உதவி ஆணையர் ராஜ் தலைமையிலான போலீசார் ஒப்படைத்தனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.