NIPM-ன் 42வது நிறுவன தின விழா

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்சனல் மேனேஜ்மென்ட் அமைப்பின் சென்னை பிரிவின் 42-வது நிறுவன தின விழா, சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கொண்டாடப்பட்டது. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பர்சனல்…

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்சனல் மேனேஜ்மென்ட் அமைப்பின் சென்னை பிரிவின் 42-வது நிறுவன தின விழா, சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கொண்டாடப்பட்டது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் லேபர் மேனேஜ்மென்ட் அமைப்புடன் இணைந்த நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் பர்சனல் மேனேஜ்மென்ட் அமைப்பின் 42-வது நிறுவன தினவிழா, சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. என்.ஐ.பி.எம் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் எம்.எச்.ராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில், அந்த அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மேத்யூ குணசீலன், பொருளாளர் தாமஸ் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மூத்த உறுப்பினர்கள் மற்றும் முன்னோடிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, அனைத்து வகையான வளங்களைக் காட்டிலும், மனித வளம் சிறப்பானது எனக்கூறிய அவர், அதனை சரியான வழியில் திட்டமிட்டு செயல்படுத்தினால் நாடு முன்னேற்றம் அடையும் எனக்கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.