உலகின் தலைசிறந்த மருத்துவர்களில் மதுரையைச் சேர்ந்த 4 பேர் தேர்வு

உலகின் தலைசிறந்த கண் மருத்துவர்களில் மதுரையை சேர்ந்த 4 மருத்துவர்கள் தேர்வாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், கண் மருத்துவம் தொடர்பான உலகின் சிறந்த ஆய்வாளர்களைத் தேர்வு செய்துள்ளது. அதில் மதுரையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையைச்…

உலகின் தலைசிறந்த கண் மருத்துவர்களில் மதுரையை சேர்ந்த 4 மருத்துவர்கள் தேர்வாகியுள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், கண் மருத்துவம் தொடர்பான
உலகின் சிறந்த ஆய்வாளர்களைத் தேர்வு செய்துள்ளது. அதில் மதுரையிலுள்ள அரவிந்த்
கண் மருத்துவமனையைச் சேர்ந்த 4 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்டான்ஃபோர்டு
பல்கலைக்கழகம் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் மருத்துவத்துறைகள்
உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உலக அளவில் சிறந்து விளங்கும்
ஆராய்ச்சியாளர்களில் முதல் 2 சதவிகிதத்தினரைப் பட்டியலிட்டுள்ளது.


அந்த ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஆயிரம்
விஞ்ஞானிகளில் பொதுவாக ஐஐடி, ஐஐஎஸ்சி போன்றவற்றிலுள்ள முதல் 2 சதவிகித
ஆராய்ச்சியாளர்கள் இடம் பெறுவர்.

இந்நிலையில் கண் மருத்துவத்துறையில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட
ஆராய்ச்சியாளர்களில் இந்தியர்கள் மட்டும் 25 பேர் உள்ளனர். அவர்களில் 8 பேர்
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, மருத்துவர்கள் ஸ்ரீனிவாசன், ரத்தினம்
சிவகுமார், வெங்கடேஷ் பிரஜ்னா, லலிதா பிரஜ்னா ஆகிய 4 பேர் மதுரையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களாவர். கண் மருத்துவத்துறையில் இந்திய அளவில் சிறந்து விளங்குபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.