முக்கியச் செய்திகள் தமிழகம்

சுனாமிக்கு சமமாக கொரோனா 3வது அலை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெல்டா மற்றும் ஒமிக்ரானுடன் இணைந்த கொரோனாவின் 3வது அலை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் 17வது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் 86.12 சதவீதம் முதல் தவணையும், 58.82 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாநில அளவை விட சென்னையில் அதிக தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், 5 லட்சம் பேருக்கு மேல் இன்னும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளதாக கூறினார். சுனாமி அலைக்கு சமமாக கொரோனா 3வது அலை உலகை ஆட்டிப் படைப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார். மேலும், 33.20 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை 5 நாட்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளதாகவும், பிறகு வீட்டு தனிமையில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Halley Karthik

நியாய விலைக் கடைகளில் இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை

EZHILARASAN D

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் எந்த சந்தேகமும் இல்லை; தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

Arivazhagan Chinnasamy