இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த 3 போட்டிகளும் டெல்லியில் நடக்கின்றன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால் ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணியிம் விளையாடும் என்பதால் இன்றைய போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது.
இன்றிய ஆட்டத்திற்கான உத்தேச பட்டியல்
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (wk)/வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன் (wk), ஷ்ரேயாஸ் லியர் (c), திலக் வர்மா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், யாஷ் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (wk), இப்ராஹிம் சத்ரான் (c), செடிகுல்லா அடல், குல்பாடின் நைப், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான்/நவீன்-உல்-ஹக், அஹல் ஹக்.




