3-வது டி20: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது டி20 இன்று இரவு 7:30 மணிக்கு க்கு தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து அக்.7-ஆம் தேதி, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. .இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 43 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து அக்.9 -ஆம் தேதி 2-வது டி20 போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 249 ரன்கள் எடுத்தது. அனால் இந்திய பந்து வீச்சாளர்கள விக்கெட்டுகளை எடுக்க தவறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதனால் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரு அனிகளுக்கும் இடையிலான 3-வது டி20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் பலம்வாய்ந்ததாக உள்ளதால் இன்ரைய போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

உத்தேச பட்டியல் :

இந்தியா : அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (wk), இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (c), திலக் வர்மா, சிவம் துபே/நிதிஷ் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், மயங்க் யாதவ்

வெஸ்ட் இண்டீஸ் : சாய் ஹோப் (c & wk), கமில் பூரன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், குடாகேஷ் மோட்டி, ஷமர் ஸ்பிரிங்கர், அக்கேல் ஹொசைன், ஷமர் ஜோசப்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.