மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. அதிக அளவாக பிராண்டன் கிங் 42 ரன்கள் எடுத்தார்.அதிரடி காட்டிய கேப்டன் ரோவ்மென் பாவெல் 19 பந்தில் 40 ரன்கள் குவித்து அசத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 6 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் களம் இறங்கிய சூர்யகுமார் பந்துகளை நாலாபுறமும் விளாசினார்.
அவருடன் இணைந்து திலக் வர்மாவும் கலக்கினார். இதன் காரணமாக 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 44 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 49 பாண்ட்யா 20 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தனர்.







