டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3ம் இடம்…!

குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது. 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் ஜன., 26 ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.  குடியரசுத் தலைவர்…

குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.

75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் ஜன., 26 ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் கோலாகலாக நடந்தன.  குடியரசு தின விழாவின் போது அரசுத் துறைகளின் நலத்திட்டங்கள், சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

இதில்,  குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.  இந்த ஊர்தி குடவோலை முறையின் பெருமையை கூறியது.  முதல் இடத்தை ஒடிசாவும்,  2ஆம் இடத்தை குஜராத்தும் பெற்றன.  மக்களின் வாக்கு தேர்வின் அடிப்படையில் குஜராத் முதலிடமும், உ.பி. 2ம் இடம்,  ஆந்திராவுக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.