அதிக மதிப்பெண் பெற்ற 30,209 மாணவிகளுக்கு ஸ்கூட்டர் பரிசு! அசாம் அரசு அறிவிப்பு!

அசாம் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்ற 30,209 மாணவிகள் மற்றும் 5,566 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர் பரிசு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டாக்டர் பனிகாந்தா ககாதி விருது…

அசாம் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்ற 30,209 மாணவிகள் மற்றும் 5,566 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர் பரிசு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டாக்டர் பனிகாந்தா ககாதி விருது திட்டத்தின்கீழ் அசாம் அரசு அந்த மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்கூட்டர் இலவசமாக வழங்கவுள்ளது.  அதன்படி, 35,775 மாணவ மாணவியருக்கு நவம்பர் 30 அன்று ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது.

75 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 5,566 மாணவர்களுக்கும் 60 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்ற 30,209 மாணவியருக்கும் இந்த ஸ்கூட்டர் பரிசு வழங்கப்படவுள்ளது. இந்த விழா வரும் 30-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர் கல்வியில் (10-ம் வகுப்பு) 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற 27,183 மாணவர்களுக்கு ரூ.15,000 நவம்பர் 29-ம் தேதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதே போல்,  சட்டப்பேரவையில் பூடான் அரசுக்கு மேலும் 3 எம்.பி.பி.எஸ் இடங்கள் அளிப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.