முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் புதிதாக 3 மேம்பாலங்கள்; ஒப்பந்தப்புள்ளி கோருகிறது தமிழ்நாடு அரசு

சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலம் கட்ட ஏப்ரல் இறுதிக்குள் ஒப்பந்தம் கோரப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், சென்னை மாநகராட்சியில் 26 மேம்பாலங்கள், 16 வாகன சுரங்கப்பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 234 சிறு பாலங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது உள்ள வாகன போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தவும், எதிர்வரும் காலங்களில் தங்குதடையற்ற வாகன போக்குவரத்தை வழங்கிடவும் 3 இடங்களில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை கணேசபுரம், தெற்கு உஸ்மான், போஜராஜன் நகரில் 288 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் எனவும், அதற்கான ஒப்பந்தங்கள் ஏப்ரல் இறுதிக்குள் கோரப்படும் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர் பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளை தீர்க்க ரூ.904 கோடி மதிப்பீட்டில் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன் உதவியுடன் சென்னையில் திறன்மிகு போக்குவரத்து திட்டம் தொடங்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: வைகோ வலியுறுத்தல்

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வி: அரசே பொறுப்பேற்க வேண்டும்! -அன்புமணி ராமதாஸ்

Web Editor

குழாய் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கலப்பு – நாகை மீனவர்கள் போராட்டம்

Web Editor