தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் உள்துறை (சிறப்புப் பிரிவு) சார்பில், 21.10.2026 தேதியிட்ட காவல் குறிப்பு எண் SC/44/2026 ன்படி, பின்வரும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் மற்றும் புதிய பொறுப்புகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளன.
1. சந்தோஷ் குமார், ஐபிஎஸ்
பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறைத் தலைவராக, சென்னையில் பணியாற்றிய சந்தோஷ் குமார், சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ரூபேஷ் குமார் மீனா, ஐபிஎஸ் க்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2. ரூபேஷ் குமார் மீனா, ஐபிஎஸ்
சிவில் சப்ளைஸ் சிஐடி, ஐஜியாக பணியாற்றிய ரூபேஷ் குமார் மீனா, திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். என். காமினி, ஐபிஎஸ் க்குப் பதிலாக இவர் பொறுப்பேற்கிறார்.
3. என். காமினி, ஐபிஎஸ்
திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றிய என். காமினி, சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்படைத் தலைவர் அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ. ராதிகா, ஐபிஎஸ் அவர்களுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவைத் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் ஏ. கார்த்திக் வெளியிட்டுள்ளார்.




