திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகத்தை மூட சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த காப்பகம் மூடப்பட்டது.
குழந்தைகள் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் கீதா ஜீவன் திருப்பூர் சென்றுள்ளார். திருமுருகன் பூண்டியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காப்பகத்தில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டமைப்பு, விசாரணை செய்யப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் கீதா ஜீவன் சிறுவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரத்தை நிவாரண உதவி தொகையாக அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கீதாஜீவன், திருப்பூர் திருமுருகப்பூண்டி காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் நிலை கண்டு முதலமைச்சர் மிகவும் வருத்தமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்ய கமிட்டி அறிவித்துள்ளார். சிறுவர்கள் தங்குவதற்கு இந்த காப்பகம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இரவு நேரத்தில் காப்பாளர் யாரும் இல்லை. காப்பகத்தின் அஜாக்கிரதையால் விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், காப்பகத்தின் மெத்தனப்போக்கால் விபத்து காப்பீடு மூடப்படுகிறது. நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . 18-8-22ம் நாள் குழந்தைகள் பாதுகாபு குழு விசாரனை செய்துள்ளனர். ஆனால் தொடர் ஆய்வு மேற்கொள்ளவில்லை. திருப்பூரில் உள்ள 13 காப்பகங்களிலும் உடனடி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும், இந்த விபத்திற்கு நிர்வாகத்தின் மெத்தனபோக்கே காரணம் எனவும், எனவே காப்பகம் மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.








