2-வது டி20 போட்டி : இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

இந்தியா – வெஸ்ட் இன்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 3-0 என…

இந்தியா – வெஸ்ட் இன்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி, இந்திய அணி சாதனை படைத்தது. தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அதேபோல்,முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.