ஜெயிலர் திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடலான “ஹுக்கும்” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
Get ready for 💥⚡️🔥#Hukum releasing Today at 6pm@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @soupersubu #Jailer #JailerSecondSingle pic.twitter.com/2ugBWOa3pB
— Sun Pictures (@sunpictures) July 17, 2023
”ஹுக்கும் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் வெளியாவது குறித்து இதற்கு முன்பாக போஸ்டர்களும் வீடியோவும் வெளியிடப்பட்ட நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயிலர்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.








