ஐபிஎல் 2022: இன்று 2வது நாள் மெகா ஏலம்

15-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கியதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக நடைப்பெற உள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. இதில்…

15-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கியதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக நடைப்பெற உள்ளது.

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள்
சேர்க்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து இந்த சீசனில் களமிறங்கும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று ஏலம் தொடங்கியதையடுத்து, இன்று இரண்டாவது நாளாக நடப்பெற உள்ளது. நடப்பு 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் பங்கேற்க 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1,214 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதில் இருந்து 590 வீரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதிப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 220 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரங்கள்,

  • இந்திய வீரர் இஷான் கிஷன், 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் 16 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங்-க்கு அடுத்தபடியாக ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றார்.
  • ஸ்ரேயாஸை 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.
  • ஹர்ஷல் படேல் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
  • ஷிகர் தவானை பஞ்சாப் கிங்ஸ் அணி 8 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
  • இந்திய வீரர் முகமது ஷமியை, 6 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்ந்தார்.
  • டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையே ஏலம் எடுப்பதில் கடுமையான போட்டி நடந்த நிலையில் அஸ்வினை 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
  • இந்திய வீரர் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 8 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
  • இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவை 8 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியுள்ளது.
  • தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, 9 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
  • டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 4 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 6 கோடியே 25 லட்சத்திற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
  • இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
  • ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ்-ஐ, 7 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!
  • இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 10 கோடியே 75 லட்சத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.
  • ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் 6 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
  • இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவை, 6 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
  • இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ 6 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
  • இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஐந்தரை கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன், 10 புள்ளி 75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
  • தமிழக வீரர் நடராஜன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • இந்திய வீரர் தீபக் சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  • நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனை 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இந்நிலையில், இன்று மீதம் உள்ள வீரர்கள் இன்றைய ஏலத்தில் அணிகளில் சேர்க்கப்படுவார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.