31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜல்லிக்கட்டு வழக்கு – கடந்து வந்த பாதை..!!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டிக்கு அனுமதி வழங்ககோரி நடைபெற்ற போராட்டமும் வழக்கும் கடந்த வந்த பாதையை குறித்து விரிவாக அலசுவோம்.

மே 2014: பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டு, காளைப் பந்தயம், காளைச் சண்டை ஆகியவற்றை மிருகவதை என்ற பெயரில் தடை செய்தது உச்சநீதிமன்றம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜனவரி 2016: பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.

ஜனவரி 2016: பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதால்  மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

நவம்பர் 2016: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

ஜன. 9, 2017: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் அவசரச் சட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.

ஜன. 12 2017: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து ஜல்லிக்கட்டுக்கு தடை தொடரும் என அறிவித்தது.

ஜன. 16, 2017: ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கிராம மக்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.

ஜன. 17. 2017: ஜல்லிக்கட்டு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்.

ஜன. 19, 2017: மெரினா புரட்சி என அழைக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவளித்தனர். இதனை தொடர்ந்து  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

ஜன., 21, 2017: மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மாநில அரசு அவசரச் சட்டம் இயற்றியது.

ஜன., 22, 2017: தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுகள் நடைபெற்றன. ஜல்லிகட்டிற்கு அனுமதி வழங்கும் நிரந்தர சட்டத்தை  நிறைவேற்றக்கோரி பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்காமலே சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

ஜன. 23, 2017: சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வன்முறை – ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

ஜன., 24, 2017: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைமையை கண்காணித்து வருவதாக மோடி அரசு அறிவித்தது

மே 18,2023: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading