தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 26 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர், கடந்த டிசம்பர் மாதம் 24ந்தேதி முதல் 30ந்தேதி வரை, பதிவான வழக்குகளில் தொடர்புடைய 26 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 6 சைக்கிள்கள், இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.







