கேரள அரசின் அமைச்சரவையில் புதிதாக 2 அமைச்சர்கள் பதவியேற்பு..!

கேரள அரசின் அமைச்சரவையில் புதிதாக 2 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். கேரள சட்ட சபையில் இரண்டரை ஆண்டுகள் மாறி மாறி அமைச்சராக இருக்கலாம் என்ற ஒப்பந்தத்தின் படி, காங்கிரஸ் எஸ் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன், காங்கிரஸ்…

கேரள அரசின் அமைச்சரவையில் புதிதாக 2 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

கேரள சட்ட சபையில் இரண்டரை ஆண்டுகள் மாறி மாறி அமைச்சராக இருக்கலாம் என்ற ஒப்பந்தத்தின் படி, காங்கிரஸ் எஸ் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன், காங்கிரஸ் பி கட்சியைச் சேர்ந்த கணேஷ்குமார் ஆகிய இருவரும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.

இதற்கு முன்னர் இருந்த அமைச்சர்களாக இருந்த அகமது தேவர்கோவில் மற்றும் ஆண்டனி ராஜா ஆகியோர் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.