அமர்நாத் யாத்திரையின் 19-வது நாளில் 17,000 பேர் தரிசனம்!

அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 19 நாள்களில் இதுவரை 1.84 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி…

அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 19 நாள்களில் இதுவரை 1.84 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. இதுவரை 19 நாட்களில்  1.84 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், 6,523 பயணிகள் அடங்கிய குழு இன்று காலை ஜம்முவின் யாத்ரி நிவாஸில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது. 2777 பேர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்தும், 3,746 பேர் பகல்காம் முகாமிலிருந்தும் புறப்பட்டுள்ளனர்.

யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை 30 பேரில், 29 பேர் இயற்கை காரணங்களால் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் கற்கள் சரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். யாத்திரைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது.

தொடர்ந்து ஆகஸ்ட் 31 வரை யாத்திரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.