29.2 C
Chennai
May 20, 2024
செய்திகள்

நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கி விடுமுறை…

ரிசர்வ் வங்கி நவம்பர் மாதத்தில் 17 நாட்களை வங்கிக்கு விடுமுறை அளித்துள்ளது

நாடு முழுவதும் வங்கிகளுக்கு வரும் நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொண்டு செயல்படுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்திற்கு மாநிலம் வங்கி விடுமுறை நாட்கள் வேறுபடும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நாடி முழுவதும் நவம்பர் 1, 3, 4, 5, 6, 10, 11, 12, 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ரிசர்வ் வங்கி விடுமுறை அறிவித்துள்ளது. இது தவிர, மாதத்தில் நான்கு ஞாயிறுகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பணம் போடுவது, எடுப்பது, பென்சன் போன்றவற்றிற்கு வங்கிகளின் செயல்பாடு  மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதனால், பொதுமக்கள் நவம்பர் மாதத்தில் வரப்போகும் விடுமுறைகளை கவனத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் தங்களது சேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அனைத்து வங்கிகளும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

 

தமிழ்நாட்டில் நவம்பர் வங்கி விடுமுறை நாட்கள்

நவம்பர் 4 – தீபாவளி

நவம்பர் 7 – ஞாயிறுக்கிழமை

நவம்பர் 13 – இரண்டாவது சனிக்கிழமை

நவம்பர் 14 – ஞாயிறுக்கிழமை

நவம்பர் 21 – ஞாயிறுக்கிழமை

நவம்பர் 27 – நான்காவது சனிக்கிழமை

நவம்பர் 28 – ஞாயிறுக்கிழமை.

 

நாடு முழுவதும் வங்கி விடுமுறை நாட்கள்

நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா (பெங்களூரு /இம்பால் மாநிலங்களில் மட்டும் விடுமுறை)

நவம்பர் 3 – நரக் சதுர்தசி (பெங்களூரில் விடுமுறை)

நவம்பர் 4 – தீபாவளி (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், கவுகாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெ ல்லி, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 5 – விக்ரம் சம்வத் புத்தாண்டு/கோவர்தன் பூஜை (அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், கான்பூர்,லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர் மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 6 – லக்ஷ்மி பூஜை (கேங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ மற்றும் சிம்லா மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 7 – ஞாயிறுக்கிழமை

நவம்பர் 10 – சத் பூஜை (பாட்னா, ராஞ்சியில் விடுமுறை)

நவம்பர் 11 – சத் பூஜை (பாட்னாவில் விடுமுறை)

நவம்பர் 12 – வாங்கலா திருவிழா (ஷில்லாங்கில் விடுமுறை)

நவம்பர் 13 – இரண்டாவது சனிக்கிழமை

நவம்பர் 14 – ஞாயிறுக்கிழமை

நவம்பர் 19 – குருநானக் ஜெயந்தி/கார்த்திக் பூர்ணிமா (அய்சோல், பெலாபூர், போபால், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 21 – ஞாயிறுக்கிழமை

நவம்பர் 22 – கனகதாசர் ஜெயந்தி (பெங்களூருவில் விடுமுறை)

நவம்பர் 23 – செங் குட்ஸ்னெம் (ஷில்லாங்கில் விடுமுறை)

நவம்பர் 27 – நான்காவது சனிக்கிழமை

நவம்பர் 28 – ஞாயிறுக்கிழமை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading