அமெரிக்காவின் மிச்சிகனை சேர்ந்த தம்பதி ஒருவர் 14 ஆண் குழந்தைகளுக்கு பிறகு தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மிச்சிகனில் வசிக்கும் கட்டேரி மற்றும் ஜே ஸ்க்வாண்ட் தம்பதிக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு வரிசையாக ஆண் குழந்தைகள் தான் பிறந்துள்ளது. இருப்பினும் பெண் குழந்தை வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது ஆசை நிறைவேறியுள்ளது. 14 ஆண் குழந்தைகளுக்கு பிறகு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
45 வயதான இந்த பெண்மணி கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்தக் குழந்தைக்கு மேகி ஜெய்னே என பெயர் வைத்துள்ளனர். 2020ம் ஆண்டில் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு இது என தம்பதியர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கும் போதும் செய்திகளில் இவர்கள் இடம்பெற தவறுவதில்லை. குழந்தையின் பாலினம் தொடர்பான செய்திகளே அதில் இடம்பெற்றிருக்கும்.
பெண் குழந்தையின் மீது இந்த தம்பதியர் வைத்துள்ள அன்பு அனைவராலும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. அந்த தம்பதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.







